மக்கள் நலன்சார் செயற்பாடுகள் எதுவுமில்லை – பருத்தித்துறை வர்த்தகர்கள் முறையீடு!
Friday, June 15th, 2018
பருத்தித்துறை நகர சபை தலைவர் சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றாத சபைக்குட்பட்ட வர்த்தக உரிமையாளர்களை பொலிஸாருடன் சென்று மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபை உறுப்பினர்களுடன் வந்து தமது பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண முற்படாமல் பொலிஸாரை கொண்டு மிரட்டியமை நகரசபைக்கு அழகல்லவென அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலமாகியும் இதுவரை எவ்வித மக்கள் நலன்சார் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.தீர்மானம் சபையில் நிறைவேற்றப்படுவதே தவிர அதனை நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது. குறைந்த பட்சம் பழுதடைந்த மின் குமிழ்களை கூட சீர்செய்யவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
அரசு பொறுப்புக்கூற தவறியுள்ளது -சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம்!
மாநகர சபையின் நிபந்தனையை மீறிச் செயற்பட்ட சிற்றங்காடிகள் இரண்டுக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு !
|
|
|


