போதைப்பொருள் விற்பனை செய்த இலங்கைப்பெண் குவைத்தில் கைது!
Wednesday, September 14th, 2016
குவைத்தில் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண் 600 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அழகு நிலையமொன்றின் முகாமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எகிப்திய பிரஜை ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர் குறித்த பெண்ணிடம் போதைப்பொருள் இருப்பதை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts:
ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை - ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா ப...
உலக தொழிலாளர் தினம் நாளை - யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படும் மே தினக் கொண்டாட்...
பாகிஸ்தான் - சீனா - பங்களாதேஷ் இணைந்து புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க திட்டம்!
|
|
|


