போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் – பொதுமக்கள் அமைப்புத் தீர்மானம்!

Thursday, December 1st, 2016

போதைப்பொருள் நடவடிக்கை, சட்ட விரோத மதுபாவனை மற்றும் உற்பத்தி போன்ற குற்றச்செயல்களைக் புரிந்து தண்டனை பெற்றவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் நிர்வாகத்தில் இயங்க முடியாது எனவும் இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவன உதவிகள் வழங்கக்கூடாது எனவும் மருதங்கேணி பொலிஸ் – பொது மக்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் வீ.எஸ்.தியாகராசா தலைமையில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற மாதந்தக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய செயற்பாடுகளினால் சமூகத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாக ஏதுவாகின்றது. இதேவேளை இக்குற்றச்செயலில் ஈடுபட்டு சிறைக்குச் செல்பவர்கள் மிக விரைவில் சமூகத்துடன் இணைந்து கொள்கின்றனர். அத்தோடு சமூகத்தை வழிநடத்தி செல்கின்ற சமூகமட்ட அமைப்புக்களிலும் இவர்களில் சிலருக்கு நிர்வாகிகளாகக் கடமைபுரிகின்ற சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. எனவே இனிவரும் காலங்களில் சமூக மட்ட அமைப்புக்களைத் தெரிவு செய்கின்றபோது மக்கள் விழிப்புடன் இருந்நு இத்தகைய நபர்களை இந்த அமைப்புகளில் தெரிவு செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். அத்தோடு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளும் இவர்களுக்கு வழங்கக்கூடாது என கிராம மட்டத்தில் கடமையாற்றும் அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலர் ஆகியோரிடம் கோரிக்கை விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களைக் குடிக்கின்ற போதை மற்றும் மது பாவனையில் ஈடுபடுவோருக்கான விழிப்புணர்வாகவும் இது அமையும் எனவம் அவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

Jaffna-drug-720x480

Related posts: