போக்குவரத்துச் சட்டம் வடமராட்சியில் இறுக்கம் : மீறுவோர் மீது நடவடிக்கை என பொலிஸ் அத்தியகட்சர் எச்சரிக்கை!
Thursday, October 13th, 2016
வடமராட்சியில் வீதிப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. வாகனங்களில் விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய குற்றங்கள் தொடர்பிலும் 0718591322 என்ற எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். தமிழ் மொழியில் பேசி முறையிடலாம். இவ்வாறு வடமராட்சிக்குத் தற்பாலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியகட்சர் சரித ஜயசுந்நதர தெரிவித்தார்.
அவர் தொவித்ததாவது:
குற்றச் செயல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன். விபத்து தொடர்பில் கூடுதலான அவதானம் செலுத்தியுள்ளேன். சைகை (சிக்னல்) காட்டத் தவறுகின்றமை, முந்திச் செல்வதில் போக்குவரத்துச் சட்ட விதிமுறை பின்பற்றப்படாமை, ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்தி செல்கின்றமை உள்ளிட்ட பல விடயங்களை அவதானித்துள்ளேன். சட்டவிதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் தெரியாது என்று எந்தச் சாரதியும் கூற முடியாது. விபத்துக்கள் அதிகரித்ததற்கு சட்ட விதிமுறைகளை உரி முறையில் பின்பற்ற தவறுகின்றமையும் காரணமாகிறது. சட்ட நடவடிக்கை மூலமாக விபத்துக்கனை தவிர்ப்பதிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏனைய குற்றங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவியுங்கள். பொதுமக்கள் 24 மணிநேரமும் அலைபேசியில் நேரடியாகத் தமிழ் மொழியில் எனக்கு அறிவிக்க முடியும். 071 859 1322 என்ற எனது அலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் பகுதிகளில் இடம்பெறும் குற்றங்கள் சமூக விரோதச் செயல்களை அறிவியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

Related posts:
|
|
|


