பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1281 பேர் கைது!

Sunday, December 17th, 2017

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 1281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை புறக்கணித்தமையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 6 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமாக நச்சு மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்பில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 கிலோக்கிராம் கஞ்சா மற்றும் 25 கிராம் ஹெரோயின் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 25000 லிற்றருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 14706 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 10 பொலிஸ் நாய்களும் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:


புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் - இராணுவத...
ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு - நுகர்வோர் விவகார அதிக...
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம் - ஜனாதிப...