பேருந்து நிலைய நடைபாதையில் சிம் அட்டைகளை விற்கத் தடை!

Saturday, January 14th, 2017

வவுனியா மைய பேருந்து நிலைய நடைபாதையில் தொலைபேசிகளுக்கான சிம் அட்டை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மைய பேருந்து நிலையக் கட்டடத் தொகுதியின் நடைபாதையில் சிம் அட்டை விற்பனை இடம்பெற்று வந்தது. இவற்றை விற்பனை செய்யும் இளைஞர்கள், பெண்களுடன் தவறாக நடக்க முற்படுவதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. வவுனியா நகர சபையின் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் நகரசபை உத்தியோகத்தர்களுடன் அந்தப் பகுதிக்குச் சென்றனர். சிம் அட்டை விற்பனைக்குத் தடை விதித்தனர். விற்பனையில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

வவுனியா மைய பேருந்து நிலைய நடைபாதையில் தொலைபேசிகளுக்கான சிம் அட்டை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது இவ்வாறு வவுனியா நகர சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

sim

Related posts: