பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பில் இருவர் கைது!
Tuesday, November 22nd, 2016
நவக்கிரி, ஈவினை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீதியால் சென்ற பெண்ணின் 2பவுண் தங்கச் சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அன்றையதினம் இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இரு இளைஞர்களும் நெல்லியடி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் சென்ற குறித்த பெண்ணை இடைநடுவில் மறித்து கதை கேட்ட இளைஞர்கள், கைபையை பறித்து அதில் இருந்த 1,000ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பியோடினர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்தார். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள்.

Related posts:
காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு!
யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீர் வீழ்ச்சி!
பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப...
|
|
|


