புறக்கோட்டையில் 1264 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குபதிவு!
Saturday, February 25th, 2017
கொழும்பு புறக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது காலாவதியான 2 ஆயிரத்து 600 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அரசங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமான விலையில் 3 ஆயிரம் கிலோகிராம் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இந்த மாதம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் மூலமாக 1762 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 1264 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியூதீனின் டுவிட்டர்பக்கத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts:
புளியங்குளத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
இலங்கை அரசியல்வாதிகள் சிலர் இந்தியாவில் - இந்திய உயர்ஸ்தானிகராலயம் அடியோடு மறுப்பு!
|
|
|


