புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்துக்கு பேருந்து சேவை நடத்தக் கோரிக்கை!

Wednesday, November 16th, 2016

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபரம் கிராமத்திற்கான பேருந்து சேவையினை நடத்துமாறு இக் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் சங்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன. 230 குடும்பங்கள் வாழ்கின்ற இக் கிராமத்தின் மாணவர்கள் உடையார்கட்டு மகா வித்தியாலம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி என்பவற்றிற்கு நாள்தோறும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றனர்.

இக் கிராமத்திலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், கமநல சேவை நிலையம், தபாலகம் என்பவற்றிற்கு பயணிப்பதற்கு ஏழு கிலோமீற்றர் வரையான தூரம் நடந்தும் மிதி வண்டிகளிலும் செல்ல வேண்டியுள்ளது. இந் நிலையில் தமது கிராமத்திற்கு பேருந்து சேவையிpனை நடத்துமாறும் இறுதியாக நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் தமது கிராமத்திற்கான பேருந்து சேவையினை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தங்களுடைய கிராமத்தினை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் இக் கிராம மக்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது.

sltb_ctb_ashok_leyland_viking_turbo_new_buses_bus_langama_sri_lanka_transport_board_public_semi_54_seater_lal-300x222

Related posts:

செயலிழந்தது பி.சி.ஆர். இயந்திரம் - 48 மணிநேரத்திற்குள் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இ...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர...
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...