புதியவகை பெற்றோல் அறிமுகம்!

Monday, May 14th, 2018

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அதற்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய எரிபொருள் வகை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசல் வகைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த யூரோ போ என்ற எரிபொருளுக்கு சர்வதேச தரத்தில் உயர் வரவேற்புகள் உள்ளது. அதில் எவ்வித கழிவுகளும் கலக்கப்படவில்லை என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லீற்றர் ஒன்டென் 95 ரக சுப்பர் பெற்ரோல் 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 119 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ள புதிய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசலின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுங்கள் - அரச ஊழியரிடம் இராஜாங்க அமைச்ச...
உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் - இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல...