புகையிரத பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.!

Saturday, November 26th, 2016

புகையிரத பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் 3வது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று 2வது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா புகையிரத திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் 108 பேர் ரயல்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அபராத தொகையாக 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த அபராத தொகையை செலுத்த மறுத்த 10 பேர் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

e28b8f34da6129ea97045d2cd3b53642_XL copy

Related posts:

ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் - தேசிய சிறுவர் பாதுகாப்ப...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!