புகையிரத நிலையத்தில் 6 கிலோ மீட்பு!

கொடிகாமம் மிருசுவில் புகையிரத நிலையத்தில் 6 கிலோ மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.கொடிகாமம் புகையிரத நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் 6கிலோகிராம் கஞ்சாவை இன்று (17) மீட்டுள்ளனர்
மிருசுவில் புகையிரத நிலையத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கொடிகாமம் பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகரம், நேற்றுக்காலை 7 மணியளவில் மீட்டுள்ளனர்.
இந்நிலையில்இ விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கஞ்சா பொதியினை மீட்கும் பணியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கே.தினேஸ் அ.கஜந்தன் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பொறுப்பாதிகாரி பிரதீப் சுரங்க எதிரசுரியா
என்.விஜிதரன் ஆகியோர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும் கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|