புகைத்தலை இல்லாதொழிக்க ஜனாதிபதியிடம் 10 யோசனைகள்!

Wednesday, September 14th, 2016

நாட்டில் புகை த்தலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய 10 யோசனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குச் சமர்ப்பித்துள்ளது.

புகைத்தலைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் ஜனாதிபதியும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மேற்படி சங்கத்தினர் அது தொடர்பான சட்ட பூர்வ நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் மந்தமான நிலையைச் சுட்டிக் காட்டியுள்ள மேற்படி சங்கத்தின் புகைத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் 10 யோசனைகளையும் ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மேற்படி யோசனைகள் அடங்கிய கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அனுப்பட்டுள்ளன.

அதேவேளை, அரச மருத்துவர் சங்கத் தலைவர் அநுருத்த பாதெனிய, செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா ஆகியோர் கையொப்பமிட்டுள்ள மேற்படி யோசனைகடங்கிய கடிதத்தின் பிரதிகள் புகையிலை மற்றும் போதைப் பொருள் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பட்டுள்ளது.

அத்துடன் புகைத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பில் தமது சங்கத்துக்குக் கடந்த காலங்களில் கிடைத்துள்ள யோசனைகளடங்கிய மகஜரில் சங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் உலக சுகாதார நிறுவனத்தின் இது தொடர்பான பரிந்துரைகளுக்கு அமையவே சங்கம் மேற்படி 10 யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு எண்ணிக்கையிலான சிகரட்டுக்கள் அடங்கிய பக்கற் மற்றும் தனித்தனியே அவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்தல், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்தல், அதற்கான முறையான அனுமதிப் பத்திர முறைமையொன்றை அமுல்படுத்தல் மற்றும் புகையிலை வரியை உடனடியாக அதிகரித்தல் உள்ளிட்ட 10 யோசனைகளே இக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

9

Related posts: