பிரபல நாடுகளின் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!

Tuesday, May 30th, 2017

அமெரிக்கா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டினுள் நிலவும் அனர்த்த நிலை காரணமாக , இலங்கைக்கு உதவிகளை வழங்க அவர்கள் இதன்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் போது , அனர்த்த நிவாரண பணிகளுக்காக ஜப்பானின் விசேட குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜப்பான் தூதுவர் கெனெச் சுகநுமா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அமெரிக்க தனது கவலையை தெரிவித்து கொள்வதாகவும் , இலங்கை அரசாங்கம் கோரும் எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.இதேவேளை , அனர்த்த நிலை தொடர்பில.

இலங்கை அரசுக்கு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமது கவலையை தெரிவித்துள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் , அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்

Related posts:

யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!
தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் - பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...