பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Thursday, June 13th, 2024
அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய திட்டமானது “புதிய கிராமம் – புதிய நாடு” என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒட்டுகேட்டிருந்தால் உடன் விசாரணை - அமைச்சர் சாகல ரட்னாயக்க!
இந்தியா படு தோல்வி : கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...
|
|
|


