பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய குற்ற விசாரணை!
Tuesday, October 3rd, 2017
சர்ச்சைக்குரிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய காவற்துறையால் குற்ற விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு , பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தப்புல த லிவேரா இது தொடர்பில் அறிவித்துள்ளார்.முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று(02) மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் , சாட்சி விசாரணையில் பங்கேற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை!
களு கங்கை பெருக்கெடுக்கலாம்- எச்சரிக்கை!
அமெரிக்கா - இலங்கை ஒத்துழைப்பு அறிக்கை!
|
|
|


