பிணை முறி விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவு!
 Tuesday, August 8th, 2017
        
                    Tuesday, August 8th, 2017
            
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர் திணைக்களத் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் சாட்சிப் பதிவுகள் இன்று முதல் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை இடம்பெற்ற சாட்சிப் பதிவுகளில் பல்வேறு தரப்பினர்களிடமும் ஆணைக்குழு சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டிருந்தது.
அதில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த விடயமானது தேசிய அராசங்கத்துக்குள் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        