பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை !

Friday, February 17th, 2017

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் எதிர்வரும் 21ஆம் திகதி இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டு நீதியரசர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் உள்ளடங்களாக இந்த குழு ஜனாதிபதியினால் நியமிக்க ப்பட்டுள்ளது.

இந்தக்குழு ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தி இருந்த நிலையில் தற்போது முறிவிநியோக மோசடிகள் தொடர்பில் விசார ணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த குழு 3 மாதங்களுக்குள் தமது அறி க்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

aa

Related posts: