பாதுகாப்பு காரணமாக புனித ஹஜ் யாத்திரைக்கான ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது!

Saturday, September 3rd, 2016

பாதுகாப்பு நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் அடிப்படையில் இம்முறை ஹஜ் யாத்திரைக்கான கோட்டா குறைவடைந்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புனித மக்கா பள்ளிவாசல் வளாகத்தில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும், கோட்டா குறைவடைவதற்கு முக்கிய காரணமாகும் என அமைச்சர் அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைக்கு மாத்திரமின்றி, ஏனைய நாடுகளுக்கும் இம்முறை ஹஜ் யாத்திரைக்கான கோட்டாக்கள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரித்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.துல்ஹிஜ்ஜா மாத தலைப்பிறை நேற்று தென்பட்டதை அடுத்தே, புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டாடப்படும் என இலங்கை வாழ் சகல முஸ்லிம் மக்களுக்கும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

150921083507_saudi_hajj_640x360_bbc_nocredit

Related posts: