பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து – ஐவர் பலி!

வாத்துவ – பெந்தரமுல்லை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. காரொன்று புகையிரதத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியிலிருந்து கொழும்பு – மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் காரொன்று மோதியுள்ளது. புகையிரத கடவையின் ஊடாக பயணிக்க முற்பட்ட கரரே புகையிரதத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடும் மழை: 8257 குடும்பங்கள் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்!
அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|