பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை உறுதி செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு – கல்வி அமைச்சு!
Monday, May 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதினாலும் ஊரடங்கு காரணமாகவும் இந்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இம்மாதம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை உறுதிசெய்வதற்காக சந்தர்ப்பத்ததை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் உள்ளிட்டோரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினையில் இணக்கப்பாடு!
பயணிகள் பேருந்துகளில் மேலும் மாற்றம் : ஆலோசிக்கிறது அரசாங்கம் !
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் - கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்...
|
|
|


