பருத்தித்துறை பிரதான வீதியில் கோர விபத்து – இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தார்.
விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் வண்டியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ரங்கன ஹேரத்தின் சழலில் சிக்கி வெள்ளையடிக்கப்பட்டது அவுஸ்திரேலியா அணி !
புகைப்பிடித்தல் - மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும் - சுகாதார சேவைக...
மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்...
|
|