பரீட்சை எழுத கூரிய வாளுடன் சென்றவர் குறித்து பொலிஸார் விசாரணை!
Sunday, December 18th, 2016
கூரிய வாள் ஒன்றுடன் பரீட்சை நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சையில் தோற்றுவதற்காக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரிக்கு குறித்த மாணவர் வாளுடன் சென்றுள்ளார்.
சுமார் 2 அடி நீளமுள்ள வாளை தனது குடைக்குள் அவர் மிக சூட்சுமமாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மாணவரை சோதனைக்கு உட்படுத்தி வாளை கைப்பற்றினர்.
குறித்த மாணவருக்கு இன்று பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவரின் செயற்பாடு குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள்: 15 பேர் கைது
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - மார்ச் 15 க்கு ...
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31 ஆம் திகதிக்குள் நடவடிக்கை - அமைச்சர் டிரான் அ...
|
|
|


