பயிரழிவு காப்புறுதி வழங்க நடவடிக்கை!
Thursday, January 26th, 2017
வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பயிர் அழிவு காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக சண்டிலிப்பாய் கமநல சேவை நிலைய பொரும்பாக அலுவலர் கே.கோகுலன் தெரிவித்துள்ளார்.
குறித்த செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அழிவை எதிர்கொண்ட அனைத்து விவசாயிகளும், சம்மேளனத் தலைவர், செயலாளர், பொருளாளர்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று சண்டிலிப்பாய் கமநல சேவை நிலைய பொரும்பாக அலுவலர் கே.கோகுலன் தெரிவித்துள்ளார்.
கொட்ட – தருண உரமானிய காப்புறுதித் திட்டத்தின் கீழ் பயிர் அழிவுக்கான படிவங்கள் கமநல கேந்திர நிலையங்களில் வழங்கப்படவுள்ளன. படிவங்களை இன்று வியாழக்கிழமை முதல் (இரு நாட்களில்) படிவங்களைப் பெற்று முழுமைப்படுத்தி வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளை விரைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரைநகர் கமநலகேந்திர நிலையத்துக்குட்பட்ட நெற்பயிர் அழிவுகொண்ட விவசாயிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றி இன்று வியாழக்கிழமை முதல் படிவங்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
|
|
|


