பனங்களி உற்பத்தி தொடர்பில் பளையில் பயிற்சி !
Saturday, July 21st, 2018
பனம் பழத்திலிருந்து பனம் கழியை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது தொடர்பான பயிற்சியொன்றை பனை அபிவிருத்திச் சபை பளைப் பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்துள்ளது.
இப்பிரதேசத்தின் சோரன்பற்று கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பயிற்சியில் 25 வரையிலான பயிற்சியாளர்கள் கலந்துகொண்டதாக சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பனம் கைப்பணி மற்றும் பனம் பழத்திலிருந்து பனம் கழியைப் பெறுவது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சிகள் யாவும் கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படவும் உள்ளன. இப்பயிற்சி வகுப்புக்களை நடத்தி அதனூடாக பயிற்சியாளர்கள் நன்மையடையக்கூடிய வகையில் அனைத்து உதவித் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு சபை உரிய நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு வசதியாக பயிற்சியாளர்கள் முதற்கட்டமாக பனம் உற்பத்தியாளர் சங்கங்களை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


