பதிவு இன்றி வெளிநாடு செல்வோர் பற்றி தகவல் அறிய முடியாத சிக்கல் நிலை!
Friday, November 25th, 2016
இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக அனுப்பும் பொது பதிவு மெற்கொள்ளாமல் செல்வோர் பற்றிய சரியான தகவல்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தொழிலுக்காகச் செல்வோர் உரிய பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அவசியம் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் கஷ்டப்படும் இலங்கையர்கள் 2480 பேரை வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் துணையுடன் திருப்பி அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டு குவைத், சவூதி, ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் திருப்பி அழைக்கப்பட்டனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:
அரச சேவை ஓய்வூதிய நிதியத்தில் 3000 பேர் அங்கத்துவம்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் - வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார...
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள் நியமனம் - சுகாதா...
|
|
|


