பணிப்பாளர் சபை கலைப்பு!
Wednesday, January 18th, 2017
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
2009 – 2016ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு தொடர்பாக, கடந்த 2016.12.30ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் வரை, நிலக்கரி நிறுவனத்தின் நடவடிக்கைகளை கொண்டு நடத்தும் பொறுப்பு, மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளரான மெரில் சில்வா வசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது

Related posts:
நடுக்கடலில் மிளகு மோசடி!
பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்...
சீனா இலங்கையின் நண்பன் ஆனால் இந்திய நலன்களுக்கு எதிராக சீனா செயற்பட இலங்கை அனுமதிக்காது - அமைச்சர் அ...
|
|
|


