படை முகாம்களை ஆய்வு செய்து சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்ய விசேட ஜனாதிபதி செயலணி!
 Wednesday, April 29th, 2020
        
                    Wednesday, April 29th, 2020
            
நாட்டிலுள்ள அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
விசேட ஜனாதிபதி செயலணியின் பிரதானி மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை , சரியாக செயற்படுத்தப்படுகின்றதா என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறு முகாம்களின் பிரதானிகளை அழைத்து, சுகாதார நடைமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் விஷேட தள்ளுபடி!
அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா - சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை - மக்கள் நடமாட்டமின்றி முற்றாக முடங்கிய கிளிநொச்சி !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        