நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு தொற்றுறுதி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 919 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 67 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 717 பேர் குணமடைந்தனர். இதன்படி இதுவரையில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 659 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
Related posts:
தேர்தலை எதிர்கொள்ள தயார் -பிரதமர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தாதியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு!
IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா - ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல் - இலங்கை கடன் மறுசீரமைப்ப...
|
|