நெற்செய்கை பகுதியில் கால்நடைகளுக்குத் தடை!

Monday, December 5th, 2016

அளவெட்டி தெற்கு விவசாய சம்மேளனத்தின் எல்லைக்குட்பட்ட நெற்செய்கைப் பகுதியில் கட்டாக்காலிகளையும், கட்டி வளர்க்கும் கால்நடைகளையும் மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவைக் கருத்திற்கொண்டு கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை வயல் வரம்புகளினூடாக, நடைபாதை, வீதிஓரம், குளக்கட்டுகளில் கட்டி மேய்க்க வேண்டாம். மேலும் இவ்வாறு கொண்டு செல்லும் கால்நடைகள் வரம்போரத்தில் உள்ள நெற்பயிர்களை மேய்வதாகக் கமக்காரர்கள் முறையிடுகின்றார்கள் எனவே தயவு செய்து எமது வேண்டுகோளை ஏற்று கமக்காரர்களின் நன்மை கருதி கால் நடைகளை வயல் வெளிகளில் விடாது கட்டுப்படுத்துமாறு வேண்டுகின்றோம் என விவசாய சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மீறும் கால்நடை உரிமையாளர் மீது சட்ட ஒழுங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

cowsgoat

Related posts: