நீர் விநியோக பணிகளுக்கு தடை இல்லை – அமைச்சர் ஹக்கீம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குழாய் நீர் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆராய்ந்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் இன்று காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவசர கூட்டமொன்றை நடத்தனார்.இந்தக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் சரத் வித்தான உட்பட சபையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நீர் விநியோக பணிகளுக்கு தடைகள் இல்லையென தெரிவிக்கப்பட்டதுடன், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிலைமையை சீராக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
Related posts:
சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்!
விவசாயத்தினை இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது - விவசாய அமைப்புக்கள்!
போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ...
|
|