நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் தீக்கிரை!
Friday, December 16th, 2016
திருகோணமலை-கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு பேருந்து வண்டி ஒன்று நேற்று(15) நள்ளிரவு இரண்டு மணியளவில் தீக்கிரையானது. குறித்த சம்பவத்தில் நகரசபை தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு வந்து தீயை அணைக்க முற்பட்ட நிலையிலும் பஸ் வண்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.
திருகோணமலை சிவன் கோயிலடியில் வழமை போன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் குறித்த பஸ் வண்டி தினமும் இரவு 10.00 மணிக்கு கொழும்பு நோக்கி பயணமாவது வழக்கம்.
கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவூம் திருகோணமலை கண்டி வீதியில் 4 ஆம் கட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் பஸ் வண்டி தீக்கிரையானமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை தலைமையகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !
ரயிலில் மோதி நபரொருவர் பலி – அரியாலையில் சோகம்!
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...
|
|
|


