நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து வடக்கில் புதிய அதிபர்கள் வழக்குத் தாக்கல்!
Wednesday, December 28th, 2016
2017 ஆம் ஆண்டு தை மாதம் பாடசாலைகள் தொடங்கும் போது தமக்கு பாடசாலை வழங்கப்படும் என்று நம்பியிருந்த புதிய அதிபர்கள் பாடசாலை நிலைப்படுத்தல் 4 ஆம் திகதிக்கு பின்னர்தான் தீர்மானிக்கப்படும் என்ற வட மாகாண கல்வியமைச்சரின் அறி விப்பைத் தொடர்ந்து பெரிதும் விரக்தி அடைந்தனர்.
நியாயமாக நடைபெறவிருந்த நியமனங்களை அமைச்சர் தலையிட்டு குழப்பியடித்து விட்டார் என ஆதங்கம் தெரிவித்தனர்.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள நாவலர் கல்வி நிலையத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட அதிபர்கள் அடுத்து என்ன செய்வது என கூடி முடிவு செய்தனர்.
இதன்படி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதென்றும் இரண்டாம் திகதி பாடசாலை செல்வதில்லை எனவும் வரும் புதன்கிழமை காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிடுவது என்றும் மீறினால் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பது எனவும் ஏகமனதாகத் தீர்மானி த்தனர்.

Related posts:
|
|
|


