நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
Wednesday, November 2nd, 2016
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும், அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
பொலிஸாருக்கு மிளகாய் பொடி வீசி ரி-56 ஆயுதத்தை பறிப்பதற்கு முயற்சி துன்னாலையில் நடுநிசி நேரம் நடந்...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை -...
|
|
|


