நிதியமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!!

அடுத்த வருட வரவு செலவு திட்டம் குறித்து இதுவரை யோசனைகள் முன்வைக்கப்படாவிடின் அவற்றை உடனடியாக முன்வைக்குமாறு நிதியமைச்சு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதன்படி அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தின் பிரதானிகள் மற்றும் மாகாண சபைகளின் செயலாளர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளுடனான திட்டங்கள் தொடர்பில் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆடி அமாவாசை இன்று!
வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கியின் ஆளுநர் தெரி...
பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்...
|
|