நாமல் பிணையில் விடுதலை!
Monday, August 22nd, 2016
நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு : கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு !
மென்பானங்களது காலாவதித் திகதியை வர்த்தகர்களே உறுதி செய்யவேண்டும் - பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!
மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் யோசனை - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தகவல்!
|
|
|


