நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி!

2018 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர்யூ.எல். தௌபிக் தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவான யானைகள் நாட்டு வெடி காரணமாகவும் துப்பாக்கி சூடு காரணமாக 16 யானைகளும், மின்சார வேலி காரணமாக 10 யானைகளும் உயிரிழந்துள்ளன.
யானை மனித மோதல்கள் காரணமாக ஹெரவபொத்தானை வனவிலங்கு வலயத்திற்குள் 6 யானைகள் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யானைகளில் இரண்டு, இரண்டரை வயதை உடைய யானைகளும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
'சீனா எமது உயிர் தோழன் - வரலாற்றில் எவ்விடத்திலும் எம் மத்தியில் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்ததில்லை -...
|
|