நாட்டில் HIV தொற்றுக்கு உள்ளானோரின் வீதம் அதிகரிப்பு!

Monday, January 9th, 2017

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரை HIV நோய்த் தொற்றுக்குள்ளான 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டை விட கடந்த வருடம் உயிரிழந்தவர்களின் வீதம் கனிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர் கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஆண்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.HIV நோய்த் தொற்றுக்குள்ளானோரில் 189 ஆண்களும், 60 பெண்களும் அடங்கியுள்ளதுடன், 15 கர்ப்பிணித் தாய்மார்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 25 தொடக்கம் 45 வயதிற்கிடைப்பட்டவர்களே அதிகம் HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் கடந்த வருடத்தில் 15 தொடக்கம் 25 வயதிற்கிடைப்பட்டவர்களில் 28 பேர் HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.எனினும் கடந்த வருடம் 11 இலட்சம் பேரிடம் HIV சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

hivaids

Related posts: