நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச இலாபத்தில் !

நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) ஆகிய நிறுவனங்கள் தற்போது இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது இதனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கிணங்க நாடு முழுவதிலுமுள்ள 370 சதொச நிறுவனங்களினூடாக அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுமன்னிப்பு காலம்!
இலங்கை கடல் அபூர்வம்!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...
|
|