நவீன ஆயுதங்களுடன் கூடிய இராணுவத்தை உருவாக்கும் பிரதமர்!

நாட்டில் நவீன ஆயுதங்களுடன் கூடிய இராணுவம் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் நேற்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
எதிர்காலத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் அதி நவீன ஆயுதங்களைக் கொண்ட இராணுவமொன்று உருவாக்கப்படும்.கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் விமானப்படையினருக்கு வழங்கப்பட்டவை விமானங்கள் அல்ல அவை வெறும் இரும்புத் துண்டுகளாகும்.கப்பல்களுக்கு பதிலாக கரையில் செல்லக்கூடிய கப்பல்களே வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் படையினருக்கு தேவையான அயுதங்கள் மற்றும் இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக தகுதியான எவரையும் நியமிக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாக புதிய வரை நியமித்தமை வரவேற்கப்பட வேண்டியது.சில நாடுகளில் புலனாய்வுப் பிரிவுகள் கிடையாது. தேவைக்கு அதிகமானளவு புலனாய்வுப் பிரிவினரை சேவையில் அமர்த்துவது பயனற்றதாகும்.ராஜபக்சக்களினால் விரட்டியடிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இன்று யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றுகின்றார்.
படையினரிக்கு மதிப்பளித்து வெளிநாட்டு இராஜதந்திர சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|