நல்லாட்சி அரசாங்கம் குறித்து பிரதமர் விசேட உரை!
Sunday, January 1st, 2017
எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் உரையாற்றப்பட உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 16 மாத கால சவால்கள், எதிர்வரும் நான்கு ஆண்டுக்கான பொருளாதார திட்டங்கள், பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி விசேட நியமனச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமர் தெளிவுபடுத்த உள்ளார்.
இந்த ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த பகிரங்க சவால் குறித்தும் பிரதமர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
க.பொ.த பரீட்சை மோசடி - மூவர் கைது!
மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை - கிளிநொச்சியில் சம்பவம்!
அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் - மத்திய வங்கி ஆளுநர் விஷேட அறிவிப்பு!
|
|
|


