தோடம்பழம் விதை தொண்டையில் சிக்கி குழந்தையை பலி!

தோடம்பழ விதை தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தையொன்று மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை வீட்டில் விளையாடிகொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.
இதேவேளை, குழந்தைகளை கீழே விளையாடவிடும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம்!
அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை - 53,000 கல்வியமைச்சர் சுசி...
|
|