தொழில்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, December 23rd, 2017

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் முதலாம் கல்வியாண்டில் பின்வரும் தொழில் கற்கைநெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரில் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவ டிப்ளோமா (NVQ – 5) சுழியோடி பயிற்சிநெறி (NVQ – 4) உயிர் பாதுகாப்பு பயிற்சிநெறி  (NVQ – 4) வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் பயிற்சிநெறி (NVQ – 4) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி (NVQ – 4) கடலக மாலுமி பயிற்சிநெறி (NVQ – 4) கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதி தொடர்பாடலும் (GPS) ஆகிய பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

படகினைச் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தினை (coxswains License) பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு கடலக மாலுமி பயிற்சிநெறியானது மிகவும் பயனுள்ளதாக அமையும். மேற்படி பயிற்சிநெறிகளுக்கு க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தரம் தோற்றியவர்கள் விண்ணப்பிக்க முடிவதுடன் விண்ணப்பதாரிகளின் பொருத்தமான நேரகாலங்களுக்கு ஏற்ப கற்கைநெறிகள் யாவும் ஒழுங்கு செய்து தரப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கற்கைநெறிகளும் கட்டணமின்றி நடத்தப்படுவதுடன் இக் கற்கைநெறிகளைக் கற்க விரும்பபவர்கள் உரிய விண்ணப்பப்படிவங்களை எமது அலுவலகத்திற்பெற்று 15.01.2018 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு 0217388188, 0718349073, 0773755063 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ்.பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் எஸ்.கிருஷ்ணலிங்கம் அறிவித்துள்ளார்.

Related posts: