தேர்தல் முன் மொழிவுகளுக்கு ஆலோசனை வழங்கிய நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு!
Sunday, September 25th, 2016
யாழ். மாவட்டத்தில் தேர்தல் தேர்தல் தொகுதி அடிப்படையில் முன்மொழிவுகளை முன்வைத்த பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கவுள்ளது.
தேர்தல் தொகுதி அடைப்படையில் உட்கட்டுமான அபிவிருத்திக்காகக் கொள்கைத் திட்டமிடல், அமுலாக்கல் அமைச்சு 25 மில்லியனுக்கான முன் மொழிவுகளைக் கோரியிருந்தது.
குறித்த முன்வரைபுகளில் மதிப்பீடுகள் , வரைபடங்கள், அதற்கான சரியான இடங்களை முன்வைத்த அரசாங்க நிறுவனங்களின் விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மேற்படி திட்டங்களுக்கான அனுமதி மாவட்ட அரசாங்க அதிபரூடாகப் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை, அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் எதிர்வரும்-2016 டிசம்பர்-31 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை - பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதியமைச்சர் விஜயதாச பணிப்புரை!
அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடை...
|
|
|


