தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படது – நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!
 Wednesday, March 8th, 2023
        
                    Wednesday, March 8th, 2023
            
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் அதில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசாங்க ஊழியர்களுக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில், நிறுவனங்களின் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளுடன் இணைந்துள்ள பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெருமளவிலான ஊழியர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் விரிவான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        