தேங்காய் விலை தொடர்பில் நடவடிக்கை!

100 ரூபா என்ற விலையில் தேங்காய் ஒன்றை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை கண்டயறியும் பொருட்டு நாடளாவிய ரீதியில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்திய செய்யும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விற்பனை விலை 70 தொடக்கம் 75 ரூபா என்ற விலைகளில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் அந்த மத்திய நிலையத்தின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் குறித்து ஆராயப்படவுள்ளது.
தேங்காயை அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்ட யாருக்கும் அனுமதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிதெரிவித்துள்ளார்.
Related posts:
|
|