தென் ஆப்பிரிக்காவில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு!

தென் ஆப்பிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது.
இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளம்இ நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. வீதிகள் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில்இ டர்பனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். காணாமற்போன பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
000
Related posts:
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல்!
மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...
|
|