திருமலை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு – ஜனாதிபதி சிறப்புப் பரிசு!

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.
ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார்.
திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர மதுமால் என்ற மாணவன் இதனை தயாரித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி ஐந்து இலட்சம் பரிசு வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை சத்துர மதுமால் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாடு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
மடு திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் - மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை - அமைச்சர் கெஹலிய...
|
|