திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் பேருந்து விபத்து ; 26 பேர் காயம்!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் கப்பல்துறைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலைப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்போது 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1200 படையினர் கைது!
இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை - ஜனாதிபதி!
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை - பொதுசுகாதார ...
|
|