தமிழ்மொழியில் தொலைபேசி மூலம் இதுவரையில் 203 முறைப்பாடுகள் வவுனியா டி.ஜ.ஜி அலுவலகம் தகவல்!
Tuesday, December 20th, 2016
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஜ.ஜி அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் இதுவரையில் 203 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பொலிஸார் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் குறிப்பாக சிறுவர்கள் துஷ்பிரயோகம், மரக்கடத்தல் சிறுவர்களைத் தண்டித்தல், பாடசாலை சீருடைதுணி விநியோக முறைகேடு, விபத்துக்கள் தொடர்பில் அதிக முறைகேடுகள் தமிழ்மொழியில் முறைப்பாடு செய்யும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத்திட்டத்தில் தமிழ்மொழி மூல முறைப்பாடுகளுக்காக 0766224949, 0766226363 ஆகிய இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யாசகர்களுக்கு இனி சிறை – பொலிசார் எச்சரிக்கை!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உய...
|
|
|


